தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.;

Update:2025-07-08 10:01 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,010-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

08.07.2025 ஒரு சவரன் ரூ. 72,480 (இன்று)

07.07.2025 ஒரு சவரன் ரூ. 72,080 (நேற்று)

06.07.2025 ஒரு சவரன் ரூ. 72,480

05.07.2025 ஒரு சவரன் ரூ. 72,480

04.07.2025 ஒரு சவரன் ரூ. 72,400

Tags:    

மேலும் செய்திகள்