பெண் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஸ்டேட் வங்கி திட்டம்
பெண் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி நிறுவனமாக ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) உள்ளது. மும்பை நகரை மையமாக கொண்டு நாட்டில் 22 ஆயிரம் கிளைகளை கொண்டுள்ள இந்த வங்கியில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஸ்டேட் வங்கி தனது பெண் பணியாளர்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தனது பெண் பணியாளர் விகிதத்தை 30 சதவீதமாக உயர்த்த உள்ளதாக ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குனர் (மனிதவளம்) கிஷோர் குமார் போலுடாசு தெரிவித்துள்ளார்.
பாலின சமநிலையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.