திருச்சி என்.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித்தகுதி என்ன என்பதை காணலாம்.;

Update:2026-01-12 11:02 IST

திருச்சி,

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி திருச்சியில் காலியாக 18 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி), திருச்சி

காலி பணி இடங்கள்: 18 (நிரந்தரம்/ஒப்பந்த அடிப்படை)

பதவி: குரூப் பி, சி பதவிகள் (ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட், சூப்பிரண்டெண்ட்)

பணி இடம்: திருச்சி

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு. கம்ப்யூட்டர் பற்றிய அறிவு திறன், ஸ்டெனோகிராபி திறன் கொண்டிருக்க வேண்டும்.

வயது: 30-1-2026 அன்றைய தேதிப்படி ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு 27 வயதும், சீனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு 33 வயதும், சூப்பிரண்டெண்ட் பதவிக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், ஸ்கிரீனிங் டெஸ்ட் மற்றும் எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-1-2026

இணையதள முகவரி: https://www.nitt.edu/home/other/jobs/

Tags:    

மேலும் செய்திகள்