போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 4 கோடி கடன் வாங்கி மோசடி; தொழிலதிபர் உள்பட 3 பேர் கைது
தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வங்கியில் கடன் வாங்க முடிவெடித்துள்ளார்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியை தொழிலதிபர் ஜதின் பிரசாத். இவர் தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வங்கியில் கடன் வாங்க முடிவெடித்துள்ளார். ஆனால், கடன் வாங்க போதிய சொத்து இல்லாததால் வேறு நபரின் சொத்துக்களுக்கு போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார்.
அந்த போலி ஆவணங்கள் மூலம் அரசு வங்கியில் ரூ. 4 கோடி கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து, ஆவணங்கள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சொத்து வேறு நபருக்கு சொந்தமானது என்பதும் ஜதின் பிரசாத் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பிரசாத் மீது வங்கி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசா தொழிலதிபர் ஜதின் பிரசாத் அவரது கூட்டளிகள் என மொத்தம் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.