மத்தியபிரதேசம்: பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;
போபால்,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவடம் ராமன்பூர் கட் பகுதியில் இன்று அதிகாலை பஸ் சென்றபோது டிரைவர் திடீரென உறங்கியுள்ளார். இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.