மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது

மேற்கு மாவட்டம் யுரேம்பம் என்ற இடத்தில் ஒரு ஆயுத வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-09-22 06:28 IST

கோப்புப்படம் 

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட ‘பிரிபேக்’ பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் தாக்சோம் மணிமதும் சிங் (வயது 20), லைஷ்ரம் பிரேம்சாகர் சிங் (24) ஆகும். பொதுமக்கள், உள்ளூர் வணிகர்கள் மற்றும் பள்ளிகளிடம் இருந்து அவர்கள் பணம் பறித்து வந்தனர்.

மற்றொரு தடை செய்யப்பட்ட அமைப்பான மக்கள் விடுதலைப்படையை சேர்ந்த அதிகாரியும், ராம்குமார் சர்மா (62) என்ற பயங்கரவாதியும் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இம்பால் மேற்கு மாவட்டம் யுரேம்பம் என்ற இடத்தில் ஒரு ஆயுத வியாபாரியும் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் பிஜம் சேட்டன்ஜித் சிங் (33). அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்