ஜார்கண்டில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.;

Update:2025-08-14 20:22 IST

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு குடும்பத்தினர் ராஞ்சி- புருலியா சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். முரி என்ற இடத்தில் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் காயம் அடைந்தார்.

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்தது, லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்த ராஞ்சியில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிரிழந்தவர்கள் ஆட்டோ ரிக்‌ஷாவை ஓட்டி வந்த ஷேக் கயாசுதீன், அவரது தாயார் ஆயிஷா கதுன், அவரது மனைவி ஜோராடின், அவரது மகன் சேக் அமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்