12 மணிநேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த முதியவர் மீட்பு

இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே தத்தளித்துள்ளார்.;

Update:2025-10-08 21:07 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சீனிகுலி கிராமத்தை சேர்ந்தவர் பரதுவயலி எல்ரோஸ் (வயது 60). இவர் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றுப்பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எல்ரோஸ் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவர் உதவிகேட்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால் அவர் கிணற்றுக்குள் விழுந்தது குறித்து குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியவில்லை. அவர் இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே தத்தளித்துள்ளார்.

இந்நிலையில், காலை 8 மணியளவில் கிணற்றின் அருகே நடந்து சென்றவர்கள் எல்ரோசின் கூச்சல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர். அங்கு எல்ரோஸ் தத்தளித்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் , தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் எல்ரோசை மீட்டனர். 12 மணிநேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த எல்ரோஸ் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்