தேயிலை தோட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; அதிர்ச்சி சம்பவம்

சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.;

Update:2025-08-10 20:08 IST

கவுகாத்தி,

அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் கிசாரி பதர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். ஆனால், சிறுமி வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேயிலை தோட்டத்தில் தேடியுள்ளனர்.

சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேயிலை தோட்டத்தில் தேடினர். இரவு 9 மணியளவில் சிறுமியை சடலமாக போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அதே பகுதியை சேர்ந்த ஜிதன் லோகர் (வயது 45) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணையில் தாயை கொலை செய்த வழக்கில் ஜிதன் லோகர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் விடுதலையானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்