புதிய சாலை திறப்பதற்கு முன்பே அடித்து சென்ற வெள்ளம் - பயங்கர காட்சி
ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.;
ராஜஸ்தான்,
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள பகோலி-ஜாஜ் சாலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜுன்ஜுனு மாவட்டத்தி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை அடித்துச்செல்லப்பட்டது. இதனால் சுமார் 30 முதல் 35 அடி ஆழம் கொண்ட பள்ளம் உருவானது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் தான், திறப்பதற்கு முன்பே புதிய சாலை அடித்துச்செல்லப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியது.