ஸ்ரீநகர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கம்
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு இன்று எர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் ஜம்முவில் தரையிறங்கி அங்கிருந்து மீண்டும் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்ல திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், விமானம் ஜம்முவில் தரையிறக்க முற்பட்டது.
ஆனால், தரையிறங்குவதற்கான முயற்சி தோல்வியடைந்ததால் விமானம் மீண்டும் டெல்லி திரும்பி சென்றது. பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. ஸ்ரீநகர் புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஜம்மு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை விமானி கண்டுபிடிக்காததால் அவர் விமானத்தை டெல்லிக்கு திருப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.