மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்; 228 பயணிகளை அழைத்து வர ஏற்பாடு

உலான்பாதரில் இருக்கும் 228 பயணிகளை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா மாற்று விமானத்தை அனுப்பி உள்ளது.;

Update:2025-11-04 21:19 IST

புதுடெல்லி,

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானம் கொல்கத்தா வழியாக டெல்லி வர வேண்டும். விமானத்தில் 228 பயணிகள், 17 பணியாளர்கள் உள்பட 245 பேர் இருந்தனர். இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கையாக மங்கோலியா நாட்டின் தலைநகர் உலான்பாதர் திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “உலான்பாதரில் இருக்கும் 228 பயணிகளை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா மாற்று விமானத்தை அனுப்பி உள்ளது. இந்த விமானம் நாளை (புதன்கிழமை) காலை பயணிகளுடன் திரும்பும். மங்கோலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஏர் இந்தியா ஊழியர்கள் இணைந்து பயணிகளை கவனித்து கொள்வார்கள்” என தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்