ஆந்திரா: கிருஷ்ணா நதியில் நடந்த கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றி

கிருஷ்ணா நதியில் கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.;

Update:2024-11-09 06:21 IST

அமராவதி,

ஆந்திராவில் ஆண்டு முழுவதும் நீர் செல்லும் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் கடல் விமானத்தை இயக்குவதன் வாயிலாக சுற்றுலாவை மேம்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவிற்கு கடல் விமானம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரை கிருஷ்ணா நதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து, விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடல் விமானத்தில் பயணிக்க இருக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக விரைவில் கடல் விமானங்களை முழு அளவில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளில் இயக்குவது தொடர்பாக அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்