ஆந்திரா: பள்ளியில் மான் சிலை சரிந்து விழுந்து மாணவி பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2026-01-25 01:52 IST

அமராவதி,

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் ஜி பெத்தபூடி ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் மதியம் மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த சிமெண்டால் ஆன மான் சிலை திடீரென சரிந்து திவி ஜாஹ்னவி (7) என்ற இரண்டாம் வகுப்பு மாணவி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்