ரெயில் நிலையத்தில் கல்லூரி பேராசிரியர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

அசோக்கை குத்திக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update:2026-01-25 02:31 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 33). இவர் விலி பார்லே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அசோக் குமார் நேற்று விலி பார்லே பகுதியில் இருந்து புறநகர் ரெயிலில் கண்டிவாலிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அசோக் குமாருக்கும் ரெயிலில் பயணித்த மற்றொரு பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ரெயில் மலட் ரெயில் நிலையம் வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, ரெயில் நிலையத்தில் வைத்து அந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசோக் குமாரை சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த அசோக்கை மீட்ட ரெயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அசோக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, அசோக்கை குத்திக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்