இன்போசிஸ் தலைவர் சுதாமூர்த்தியிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி

செல்போனில் இருந்து ஆபாச படங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுவதாக மர்மநபர் கூறியுள்ளார்.;

Update:2025-09-23 11:24 IST

பெங்களூரு,

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான சுதாமூர்த்தி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சுதாமூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் (டிராய்) ஊழியர் என்றும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளது.

எனவே உங்கள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தரும்படி கேட்டுள்ளார். மேலும் உங்கள் செல்போனில் இருந்து ஆபாச படங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் மர்மநபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுதாமூர்த்தி அந்த செல்போன் அழைப்பை துண்டித்தார்.

இதையடுத்து ட்ருகாலர் செயலி மூலம் தனது அழைப்புக்கு வந்த செல்போன் எண்ணை சரிபார்த்தார். அதில் தொலைத்தொடர்பு அமைச்சகம் என வரவில்லை. அப்போது தான் மர்மநபர் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கி பணம் பறிக்க திட்டமிட்டது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் சம்பவம் பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்