இந்தியாவில் எல்லாவற்றையும் தீர்மானிக்க பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி தாக்கு
நவீன இந்தியாவின் கடமைப்பை உடைக்க பாஜக விரும்புகிறது என்று ராகுல் கந்தி கூறினார்.;
புதுடெல்லி,
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, கிராமப் புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த சட்டத்தில் மத்திய பாஜக அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா' (VB—G RAM G 2025) என்ற இந்த சட்டம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
இது வெறும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் மட்டுமல்ல, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை அதிகாரமளித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. எனினும், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நீர்த்து போக செய்யும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் கொண்டு வந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில், இன்று மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: -
இந்தியாவில் மன்னரைப்போல எல்லாவற்றையும் தீர்மானிக்க பாஜக விரும்புகிறது. நவீன இந்தியாவின் கட்டமைப்பை உடைக்க பாஜக விரும்புகிறது. அதை தடுக்க ஒரே வழி நாம் ஒன்றிணைவதே ஆகும். இந்தியாவின் சொத்துகளும் செல்வமும் சிலரின் கைகளில் இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதானி, அம்பானி போன்ற பணக்கார்களை ஆதரித்து இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆள்வதை தீர்மானிக்கவும், அனைத்து செலவுகளும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க என விரும்புகிறார்கள். அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாவிட்டால் பட்டினி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் மாதிரி. நாம் அழுத்தம் தந்ததன் விளைவாக விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை பாஜக ரத்து செய்தது. விவசாயிகளுக்கு எதிரான அதே அடக்குமுறையை தொழிலாளர்கள் பாஜக பயன்படுத்துகிறது” என்றார்.