ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஐதராபாத்,
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை 30 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். தனியார் பஸ்சில் சீதாராமராஜு மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டைழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.