கர்நாடகத்தில் கார், லாரி நேரில் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
காரை ஓட்டிச் சென்ற நபர் உயிருடன் எரிந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் ஸ்ரீரங்கப்பட்டனா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரும், லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட சில நொடிகளிலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் சிக்கியிருந்த சந்திரசேகர் வெளியே வரமுடியாமல் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.