பாதுகாப்புப்படைக்கு ரூ. 79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்; மத்திய அரசு ஒப்புதல்

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update:2025-12-29 19:18 IST

டெல்லி,

மத்திய பாதுகாப்புப்படைக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்புப்படைக்கு ரூ. 79 ஆயிரம் கோடியில் புதிதாக ஏவுகணைகள்,டிரோன்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படைக்கு வரும் ஆண்டு புதிதாக ஏவுகணைகள், டிரோன்கள், ரேடார்கள் , வெடிபொருட்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்