சத்தீஷ்கார்: பாதுகாப்பு படைகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சீருடையில் இருந்த 4 நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.;

Update:2025-07-29 15:28 IST

சுக்மா,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்டோர் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் இன்று ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகள், படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். படையினரும் பதிலடி கொடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

நக்சலைட்டுகளின் ஒழிப்பு முயற்சிகளில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் ஈடுபட்டு வருகின்றன என ஐ.ஜி. சுந்தர் ராஜ் கூறியுள்ளார். இதன்படி, படையினருடன் எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை படை, சஹஸ்திர சீமா பால் மற்றும் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சீருடையில் இருந்த 4 நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்