மத்தியபிரதேசம்: கார் விபத்தில் முன்னாள் மந்திரியின் மகள் உள்பட 3 பேர் பலி
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
போபால்,
மத்தியபிரதேசம் ராஜ்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். இவர் மத்தியபிரதேசத்தின் உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் மந்திரி பாலா பச்சனுக்கு பிரேர்னா பச்சன் என்ற மகள் இருந்தார். இந்நிலையில், பிரேர்னா பச்சன் நேற்று இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி , கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பிரேர்னா பச்சன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இளம்பெண் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.