21-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.;

Update:2026-01-09 11:24 IST

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ‘இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு-2026’ நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து தேர்தல் மேலாண்மை அமைப்புகள் பங்கேற்கின்றன.

சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் 4 ஐ.ஐ.டி.கள், 6 ஐ.ஐ.எம்.கள், 12 என்.எல்.யு.க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.சி. உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தேசிய மற்றும் சர்வதேச கல்வி வல்லுனர்கள் தலைமையில் 36 கருப்பொருட்களில் குழு விவாதங்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டின் முன்னோட்டமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் கமிஷன் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சர்வதேச மாநாட்டின் நுணுக்கங்கள் மற்றும் அவற்றின் குறிப்பிட்ட பாத்திரங்கள் குறித்து விளக்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்