சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு: 5 பேர் மீது வழக்கு பாய்ந்தது
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு பாய்ந்தது.;
பெங்களூரு,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் கவாய். இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், வழக்கறிஞர் ராகேஷின் காலணியை எடுத்து போலீசார் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் சமூக வலைதளங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக சிலர் அவதூறாக பேசி கருத்துகளை பதிவு செய்திருந்தனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து கேசரி சந்தன், ஸ்ரீதர்குமார், நாகேந்திர பிரசாத், ரமேஷ் நாயக், மஞ்சுநாத் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பெயரிலான கணக்குகளில் இருந்து தான் தலைமை நீதிபதி குறித்து அவதூறான பதிவு வெளியிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.