வீடியோ எடுக்க முயன்றபோது ஆற்றுக்குள் விழுந்த பாஜக எம்.எல்.ஏ.
யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;
டெல்லி,
தலைநகர் டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் நெகி. இவர் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் யமுனை ஆற்றங்கரையில் நின்றவாறு வீடியோ எடுக்க முயன்றார். ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்த ரவீந்தர் சிங் திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்தரின் ஆதரவாளர்கள் உடனடியாக அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.