டெல்லி; 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதம் - 2 குழந்தைகள் பலி

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-04-27 19:38 IST

புதுடெல்லி,

டெல்லி ரோகினியில் செக்டார் 17 இல் உள்ள ஜூகி கிளஸ்டரில் பல குடிசை வீடுகள் அமைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும் தீயானது கிடுகிடுவென அருகில் உள்ள குடிசைகளில் பரவத்தொடங்கியது. பின்னர் கூடுதலாக 26 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மொத்தம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த 800 க்கும் மேற்பட்ட அடர்த்தியான குடிசைகளை தீ சூழ்ந்தது. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக மோராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 வயது மற்றும் 3 வயது குழந்தைகள் தீயில் கருவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே சம்ப இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மின் வயரிங் அமைப்புகள் இல்லை, ஆனால் பல சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம்? என சந்தேகிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்