துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.;
டெல்லி,
துணை ஜனாதிபதியாக செயல்பட்டு வந்த ஜெக்தீப் தன்கர் பதவியை கடந்த ஜுலை 21ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். அவர் நாட்டின் 17வது துணை ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் இன்று சந்தித்தார். டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்ட விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.