பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்று 152 விமானங்கள் ரத்து
79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.;
Image Courtesy : ANI
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலை நிலவியது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. பகல் நேரத்திலும் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன.
இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில், 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் 152 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.