லடாக்கில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-01 21:24 IST

லே,

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் இன்று மாலை 5.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தரைமட்டத்தில் சுமார் 70 கி.மீ. ஆழம் வரை ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆழமில்லாத நிலநடுக்கங்களாக அறியப்படுகின்றன. இதுபோன்ற நிலநடுக்கங்களால்தான் பூமியின் மேற்பரப்பில் அதிக அதிர்வும், கட்டிட சேதங்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்று லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்