வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

எந்த வாக்காளரையும் ஆன்லைன் மூலம் நீக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.;

Update:2025-09-18 13:07 IST

புதுடெல்லி,

ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும்,தற்போது தான் 100 சதவீதம் ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாப்பதற்காகவே இதனை நான் செய்கிறேன்.

வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்.லட்சக்கணக்கானோரை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம், வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்தநிலையில், ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ராகுல் காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. 2023-ல் அலந்த் தொகுதியில் பெயரை நீக்க சில முயற்சி நடந்தபோது, அதுபற்றி தேர்தல் ஆணையமே புகார் தந்தது.

அலந்த் தொகுதியின் 2018-ல் பாஜக வேட்பாளரும், 2023-ல் காங்கிரஸ் வேட்பாளருமே வென்றனர் என வாக்காளர் பட்டியலில் முறைகேடு என ராகுல் காந்தி அளித்த பேட்டியை பகிர்ந்தது தேர்தல் ஆணையம் எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்