மராட்டியத்தில் என்கவுன்ட்டர்: 2 பெண் நக்சலைட்டுகள் படுகொலை
சத்தீஷ்காரில் கடந்த 12-ந்தேதி காலையில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில், 2 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.;
கட்சிரோலி,
மராட்டியத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் மொடாஸ்கே கிராமத்தில் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில், 2 பெண் நக்சலைட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக தானியங்கி துப்பாக்கி ஒன்றும், கைத்துப்பாக்கி, வெடிக்கும் நிலையிலுள்ள வெடிபொருள், புத்தகங்கள், உடைமைகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை (12-ந்தேதி) காலையில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில், தலைக்கு ரூ.8 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.