வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
புதுடெல்லி,
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெய்சங்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு சிறந்த இராஜதந்திரியாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறீர்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் உலக நாடுகளுடனான உறவுகளையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறீர்கள். நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெற பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.