தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி அடித்துக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பிரேம்சந்தை அடித்துக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டம் ஹிலாக் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரேம்சந்த் (வயது 55). இவர் நேற்று இரவு வழக்கம்போல பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தோட்டத்திலேயே படுத்து உறங்கியுள்ளார்.
நள்ளிரவு தோட்டத்திற்குள் கும்பல் நுழைந்துள்ளது. அந்த கும்பல் உறங்கிக்கொண்டிருந்த பிரேம்சந்தை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பிரேம்சந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
காலை வேகுநேரமாகியும் பிரேம்சந்த் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு பிரேம்சந்த் ரத்த வெள்ளத்தின் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேம்சந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேம்சந்தை அடித்துக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.