அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இந்த அட்டாரி-வாகா எல்லையில் கொடியேற்றம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.;

Update:2026-01-26 19:29 IST

சண்டிகர்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டாரி பகுதி அமைந்துள்ளது. அதே போல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்த கொடியேற்றம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியின்போது இந்திய பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்பார்கள். இந்நிலையில், இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். அவர்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில், 'ஜெய்ஹிந்த', 'வந்தே மாதரம்' என முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்