நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு?

வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-12-02 12:12 IST

புதுடெல்லி,

நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 - 27ம் நிதியாண்டிற்குள் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கைகள், வங்கி கிளைகளின் செயல்பாட்டை சீரமைக்கவும், தேவையற்ற கூடுதல் செலவுகளை குறைக்கவும், மூலதனத்தை மிக சிறப்பாக பயன்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2017 - 2020 காலகட்டத்தில் 21ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை இணைப்பு நடவடிக்கைகளுக்கு பின் 12ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் முதலில் மத்திய நிதி மந்திரியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கோரப்படும். செபியிடமும் கருத்து கேட்கப்பட்ட பின் இறுதி செய்யப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்