கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்; 7 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தரையிறங்கும் தருணத்தில் வானத்தில் சுழன்றபடி தத்தளித்தது.

Update: 2024-05-24 08:32 GMT

டேராடூன்,

சிர்சி ஹெலிபேடில் இருந்து இன்று அதிகாலை கேதார்நாத்துக்கு 6 யாத்ரீகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இந்த நிலையில் காலை 7 மணியளவில் ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து சில மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, மோட்டாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஹெலிபேடில் தரையிறங்கும் தருணத்தில் வானத்தில் சுழன்றபடி தத்தளித்தது.

 விமானியின் சாமர்த்தியத்தால், ஹெலிகாப்டர் பத்திரமாக ஹெலிபேடுக்கு அருகில் தரைப்பகுதியில் தரையிறங்கியது. 6 யாத்ரீகர்கள் மற்றும் விமானி என ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும், யாத்ரீகர்கள் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர் என்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டு  சவுரப் கஹர்வார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்