``இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளது'' - ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து

இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-16 15:44 IST

புதுடெல்லி,

இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாகவும், பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா. சிதம்பரம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா கூட்டணி தற்போது ஒற்றுமையாக இருந்தாலும், பலவீனமாக இருப்பதாகவும் ஆனால் சில நிகழ்வுகள் மூலம் அதை பலப்படுத்த முடியும் என்றும் அதற்கான கால அவகாசம் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பாஜகவை போல அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியை எதிர்கொள்வது சவாலான விஷயம் என்றும், பாஜகவின் ஆதிக்க செயல்பாடுகளை பார்க்கும் போது இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்