இஸ்லாமாபாத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படும்; மத்திய பிரதேச மந்திரி பேச்சு
அகண்ட பாரதம் என்று மத்திய பிரதேச மந்திரி விஜய் வர்கியா கூறியுள்ளார்.;
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் மாநில மந்திரி கைலாஷ் விஜய் வர்கியா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், இந்திய பிரிவினை குறித்து பேசினார்.அவர் கூறும்போது, ‘தவறான கொள்கைகளால் பாரத மாதா இரண்டாக பிரிக்கப்பட்டாள்.
பகத்சிங் தூக்கு மேடையை தழுவியதற்காக பெறப்பட்ட சுதந்திரம் ஆகஸ்டு 15-ந் தேதி கிடைக்கவில்லை. அரைகுறை சுதந்திரத்தை மட்டுமே பெற்றுக்கொண்டோம்’ என தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது, ‘நாம் ஒரு அகண்ட பாரதத்தை கனவு காண்கிறோம். ஒருநாள் அந்த கனவு நனவாகும். அப்போது இஸ்லாமாபாத்தில் நமது மூவர்ணக்கொடி ஏற்றப்படும்’ என்றும் கூறினார்.