இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தமால் போர்க்கப்பல் 1-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய கடற்படை மேற்கு பிரிவில் தமால் போர்க்கப்பல் இணைக்கப்பட உள்ளது.;
Image Courtesy : PTI
புதுடெல்லி,
இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ். தமால்' (INS Tamal), வரும் ஜூலை 1-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து இந்த கப்பல் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
மொத்தம் 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். தமால் போர்க்கப்பல், ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய கடற்படை மேற்கு பிரிவில் இணைக்கப்பட உள்ளது. இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்ட ஒரு போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் கடைசி நிகழ்வு இதுவாகும். இது இந்திய அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வெளிநாட்டு கொள்முதலில் இருந்து உள்நாட்டு உற்பத்திக்கு மாறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக திகழ்கிறது.