‘கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது’ - அமித்ஷா

உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-03 14:26 IST

புதுடெல்லி,

அரியானா மாநிலம் ரோடாக் பகுதியில் ரூ.325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;-

“இந்தியாவில் பால்வளத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பால்வளத்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

2014-2015 ஆம் ஆண்டில் 8.6 கோடியாக இருந்த கறவை மாடுகளின் எண்ணிக்கை 11.2 கோடியாக அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 14.6 கோடி டன்னில் இருந்து 23.9 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. 8 கோடி விவசாயிகள் பால்வளத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.”

இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்