தொழில்நுட்ப கோளாறு: கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்

விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.;

Update:2024-11-19 16:26 IST

File image

கொச்சி,

பெங்களூரில் இருந்து மாலத்தீவின் தலைநகரான மாலே நோக்கி சென்ற இண்டிகோ ஏ321 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று பிற்பகல் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இண்டிகோ விமானம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டதாகவும், அதை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும், அந்த விமானம் பிற்பகல் 2.20 மணியளவில் பத்திரமாக கொச்சியில் தரையிறக்கப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்