மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை தடுக்க நடவடிக்கை; பிரதமர் மோடி
மேற்குவங்காள சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.;
கொல்கத்தா,
மேற்குவங்காள சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளா. அவர் மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, 3 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாலை, ரெயில்வே திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
ஊடுருவல் மேற்குவங்காளத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வளர்ந்த அதிக செல்வம் நிறைந்த நாடுகள் கூட சட்டவிரோத அகதிகளை கண்டறிந்து அவர்களை வெளியேற்றி வருகின்றன.
மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு வங்காளத்திற்குள் சட்டவிரோத அகதிகள் நுழைவது நிறுத்தப்படும். மேற்கு வங்காளத்தில் உள்ள சில இடங்களில் மக்கள் பேசும் மொழியே மாறியுள்ளது. வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்கு வங்காளத்தின் மண்டல், முர்ஷிதாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஊடுருவல்காரர்கள் மேற்குவங்காளத்தில் குடியேற திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாப்பு அளிக்கிறது. ஊடுருவல்காரர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே கூட்டணி உள்ளது’ என்றார்.