சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்; 2 மாவோயிஸ்டுகள் படுகொலை

சத்தீஷ்காரில் காட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர்.;

Update:2026-01-17 14:33 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் வடமேற்கே வன பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று பாப்பா ராவ் என்ற மாவோயிஸ்டையும் தேடி சென்றனர். இவர் 2010-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 76 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.

இந்த நிலையில் காட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சம்பவத்தில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்