சஞ்சார் சாதி கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்

சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.;

Update:2025-12-02 15:00 IST

புதுடெல்லி,

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில். அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். அதில்,

சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். மேலும் பயனர் அதை ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்