ஜார்கண்ட்: மதரசாவில் இருந்து தப்பி சென்ற 2 பேர் மீது வேன் மோதல்; மாணவன் பலி
சிறுவனுக்கு இழப்பீடு கோரி கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்லா,
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி-கும்லா சாலையில் வேன் ஒன்று, நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது இன்று மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் பர்ஹான் மிர்தஹா (வயது 12) என்ற சிறுவன் பலியானான். முர்சில் மிதஹா என்ற மற்றொரு நபருக்கு பலத்த காயமேற்பட்டது. அவர் ராஞ்சியில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி கஞ்சன் பிரஜாபதி கூறும்போது, ஹது பகுதியில் உள்ள மதரசாவில் படித்து வரும் 2 மாணவர்கள், இன்று காலை மதரசாவில் இருந்து தப்பி சொந்த கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டு உள்ளது என கூறினார்.
இதனையடுத்து, அந்த கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு இழப்பீடு தர வேண்டும் என கோரினர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.