கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல்:ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

முதல் பரிசு வென்ற டிக்கெட்டை கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் சுதீக் என்பவர் விற்றுள்ளார்.;

Update:2026-01-25 06:43 IST

திருவனந்தபுரம்,

கேரள அரசின் லாட்டரி துணை இயக்குனர் அஜி ஜெயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு சிறப்பு பம்பர் குலுக்கல் நேற்று நடைபெற்றது. இந்த குலுக்கலில் XC 138455 என்ற எண்ணுக்கு ரூ.20 கோடி முதல் பரிசு விழுந்துள்ளது. முதல் பரிசு வென்ற டிக்கெட்டை கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் சுதீக் என்பவர் விற்றுள்ளார்.

அதே எண்ணை கொண்ட மற்ற ஒன்பது வரிசைகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மொத்தம் 54 லட்சத்து 8 ஆயிரத்து 880 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்