குஜராத்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி
விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.;
காந்தி நகர்,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் நேற்று இரவு 7 மணியளவு உடல்நலக்குறைவு ஏற்பட்ட உறவினரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக குஜராத் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் அபு-பனன்புர் தேசிய நெடுஞ்சாலையில் இக்பால்கட் கிராமம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி , கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.