வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு

வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தனர்;

Update:2025-06-25 15:05 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மேப்பாடி, முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவால் உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்