ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21+ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அவை தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணிக்கு அவை கூடியதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டன
. இந்த அமளிக்கு இடையே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.