ஊசிபோட்டு...14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 200 பேர் - போலீசார் அதிர்ச்சி

கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு அந்த மாணவியை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.;

Update:2025-08-12 16:16 IST

மும்பை,

வங்காள தேசத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு 14 வயது பள்ளி மாணவி ஒருவர் பள்ளி தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தார். இதனால் பயந்து போன அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.அந்த மாணவியை பெண் ஒருவர் ஆசை காட்டி தனது வீட்டில் சிறிது நாட்கள் தங்க வைத்துள்ளார். பிறகு அந்த அந்த மாணவியை அந்த பெண் இந்தியாவிற்கு ஊடுருவ செய்து அழைத்து வந்துள்ளார். முதலில் அந்த மாணவி குஜராத் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.

அந்த மாணவிக்கு அங்கு பருவம் வருவதற்கான ஊசியை கட்டாயப்படுத்தி போட வைத்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து அந்த மாணவியை அந்த பெண் குஜராத்தில் நதியாத் என்ற பகுதிக்கு அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.

அதற்கு மறுத்ததால் அந்த மாணவியை கம்பியால் சூடு வைத்து மிரட்டி பணிய வைத்துள்ளனர். அதற்கு பிறகு அந்த மாணவியை மராட்டிய மாநிலம் மும்பைக்கு அழைத்து வந்து உள்ளனர். அங்கு அவர் வேறு நபரிடம் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த நபர் அந்த மாணவியை நாட்டின் பல்வேறு பகுதிக்கும் அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். குறிப்பாக நவிமும்பை, புனே பகுதிகளில் அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு அந்த மாணவியை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். கடந்த மாதம் அந்த மாணவி மராட்டிய மாநிலம் பல்கர் என்ற நகரில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.இதற்கிடையே அந்த மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று போலீசாருடன் இணைந்து கடத்தி வரப்படும் சிறுவர், சிறுமிகள் மற்றும் மாணவிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டது. அப்போது இந்த வங்காள தேச மாணவி நைய்கான் என் இடத்தில் ஒரு விடுதியில் இருந்து அதிரடியாக மீட்கப்பட்டார். அவருடன் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த மாணவியை அவர்கள் வங்காள தேசத்தில் இருந்து கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவி வங்காள தேசத்தில் இருந்து தான் கடத்தி வரப்பட்ட தகவலை தெரிவித்தார். தினமும் தனக்கு நேர்ந்த பாலியல் கொடூரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.மாணவி அழுதுகொண்டே கூறுகையில், கடந்த 3 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறினார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி மீட்கப்பட்ட அந்த மாணவி கூறிய தகவல்களின் அடிப்படையில் குற்றாவாளிகளை கைது செய்ய முடியுமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்